குல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கிறார் குல்பூஷன் ஜாதவ். இவர் இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர்.

 

இவரது மரண தண்டனை சர்வதேச நீதி மன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. இந்தநிலையில் ஜாதவ் சிலநாட்களுக்கு முன் தன் குடும்பத்தினரை சந்தித்தார். இந்தசந்திப்பின் போது ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் பாகிஸ்தான் அதிகாரிகளால் மிகவும்மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார்.

சேத்தன்குல்லின் தாலி, வளையல், தோடு ஆகியவற்றை கழட்டசொல்லி உள்ளனர். இதுமட்டும் இல்லாமல் பாகிஸ்தானில் பெண்கள் இருப்பதுபோல் தலையை சுற்றி புடவையை சுற்றிக்கொள்ள சொல்லியுள்ளனர். பாகிஸ்தானின் இந்தசெயலுக்கு தற்போது துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் '' பாகிஸ்தானின் செயல் கொஞ்சம்கூட மனித தன்மையற்றது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
 

Leave a Reply