தமிழகத்திற்கு தேவையான கூடுதல் உரங்களைவழங்க, மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.இது குறித்து, வேளாண் துறை உரங்கள் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேளாண் துறையிடம், தற்போது, லட்சம் டன் யூரியா, 54 ஆயிரம் டன் பொட்டாசியம், 1.25 லட்சம்டன் கூட்டு உரங்கள், 53 ஆயிரம்டன் டி.ஏ.பி., கையிருப்பில் உள்ளது.

இந்தமாதத்திற்கு கூடுதலாக, ஒருலட்சம் டன் யூரியா, 60 ஆயிரம் டன் பொட்டாசியம், 90 ஆயிரம் டன் கூட்டு உரங்கள், 50 ஆயிரம் டன் டி.ஏ.பி., வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.

இதை, மத்திய அரசு உடனடியாக ஏற்றது. காரைக்கால் துறை முகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 80 ஆயிரம் டன் யூரியாவை உடனே எடுத்துக் கொள்ள, அனுமதி வழங்கி உள்ளது.மீதமுள்ள உரவகைகளை, விரைவில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு, தட்டுப்பாடின்றி உரங்கள்வழங்க முடியும்.இவ்வாறு கூறினார்.

Tags:

Leave a Reply