கூலிப் படைகளை தண்டிக்க, தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்' என, தமிழக பாஜக, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னையில், தினசரி ஒன்று அல்லது இரண்டுகொலைகள் நடக்கும் என்பது, எழுதப் படாத விதியாகி விட்டது. கோடம் பாக்கத்தில், வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் கொல்லப் பட்டுள்ளார். மக்களுக்காக போராடுபவருக்கே இந்தகதியா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழக அளவிலும் இதேநிலை தான் என்றாலும், தலைநகரிலேயே இப்படிப்பட்ட போக்கு அதிகரித்துவருவது, போலீசாருக்கு பெருமை தராது. சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி, குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். எனவே, கூலிப்படைகளை வேரோடு அழிக்க, கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்.

Leave a Reply