பாஜகவின் செய்திதொடர்பாளர் ஹரிஷ் குரானா தனது டிவிட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

டெல்லியின் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் 2 தொகுதிகளில் வாக்குரிமை பெற்றுள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஹரிஷ் குரானா, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவிக்கு 3 வாக்காளர் அட்டைகள் உள்ளன. டெல்லி சாந்தினிசவுக் தொகுதி, உத்தரபிரதேசத்தின் கசியாபாத், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா வடக்கு தொகுதியிலும் அவர் வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளார் எனகூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply