கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதி முறைகளை தளர்த்த மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இப்பள்ளிகளை அமைக்க போதியளவில் நிலம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை அடுத்து இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது கிராமப்பகுதிகளில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்க 10 ஏக்கர் நிலமும், நகர்ப்புறங்களில் 8 ஏக்கர் நிலமும், பெருநகரங்களில் 4 ஏக்கர் நிலமும் தேவை என்று விதியுள்ளது. இந்த நில அளவை குறைத்துக்கொள்வது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஏனெனில், பள்ளிகளை அமைக்க போதியளவு நிலம் ஒரே இடத்தில் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்னை நீடித்துவருகிறது.

நாட்டில் இப்போது ஆயிரத்துக்கும் அதிகமான கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. மாநிலஅரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இப்பள்ளிகளைத் திறந்து வருகிறது.

Leave a Reply