தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்தியஅரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு மே 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க இரண்டு நிறுவனங் களுக்கும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் இந்தியர்களின் தகவல்கள் தேர்தல் முறைகேடு களுக்கு பயன்படுத்தப் பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்து பவர்களின் தகவல்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. 5.62 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித் திருந்தது. தகவல் திருட்டு தொடர்பாக இரண்டு நிறுவனமும் அளித்தபதில் திருப்தி அளிக்காததால் மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply