பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல்நாகரிகம் குறித்து கேள்வி எழுப்பிய கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அந்தமாநில பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

 கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், கேரளத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப்பேசியது மாநிலத்தை அவமதிக்கும் செயல் என்றும், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தேசிய சராசரியை விட கேரளம் உயர்வாகவே உள்ளது என்றும் சாண்டி சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், கேரளம்குறித்த தவறான கருத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாண்டி வலியுறுத்தியிருந்தார்.


 இந்நிலையில் கேரளமாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்த புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் இதுதொடர்பாகக் கூறியதாவது: அண்மையில் கண்ணூர் மாவட்ட மலைவாழ் மக்கள் காலனியில் இருசிறார்கள் குப்பைத்தொட்டியில் இருந்து உணவைத்தேடிய செய்தி வெளியாகி, தேசத்தின் மனசாட்சியையே உலுக்கியது. இது போன்ற சூழ்நிலையில் கேரளத்தில் பிரதமர் பேசிய விஷயங்கள் தவறானவை அல்ல.


 கேரளத்தில் அரசு சரியாக செயல் பட்டிருந்தால், இருசிறார்கள் உணவுக்காக குப்பைத் தொட்டியை தேடவேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. அட்டப் பாடியில் 143 சிறார்கள் ஊட்டச்சத்து பற்றாக் குறையால் உயிரிழந்துள்ளனர். இவற்றையெல்லாம் முதல்வர் உம்மன் சாண்டி மறந்து விட்டார்.


 மாநிலத்தில் பட்டினி சாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை அவர் முதலில் விளக்கவேண்டும். மாநிலத்தைப் பற்றி சாண்டி கூறும் புள்ளி விவரங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையே அதிர்ச்சிய ளிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன என்றார் ராஜசேகரன்.

Leave a Reply