கேரளா சென்றுள்ள பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, கண்ணூரில் பேசும்போது "சபரிமலையில் புனிதத்தை காப்பதில் பக்தர்கள் பக்கம் பாஜக நிற்கிறது" என பேசியுள்ளார்.

கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயண குரு மடத்தில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. சிவகிரி மடத்தில் நடக்கும் நாராயணகுரு பூஜையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் கண்ணூர் வந்தார்.
சபரிமலை விவகாரத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்திவரும் நிலையில் அமித்ஷா கேரளா வந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அரசு ஆணையை சுட்டிக்காட்டி வன்முறை நடத்த விரும்புவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நம் நாட்டில் நிறைய கோயில்களில் விதவிதமான பழக்கவழக்கங்கள் பின்பற்றப் படுகின்றன. இன்று கேரளாவில் மத நம்பிக்கைக்கும் அரசாங்கத்தின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

பாஜக, ஆர்எஸ்எஸ். மற்றும் சார்பு இயக்கங்களைச் சேர்ந்த 2000 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சபரிமலையின் புனிதத்தை காப்பாற்றுவதில் பாஜக பக்தர்கள் பக்கம் பாறைபோல் நிற்கிறது. கேரளாவின் இடதுசாரி அரசுக்கு இது ஓர் எச்சரிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply