கேரளாவின் முதல்மெட்ரோ ரயில் சேவையை வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து, அதில் பயணம்செய்கிறார்.

கேரளாவின் கொச்சிநகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கிமீ தூரத்துக்கானபாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரோரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து முதல் ரயிலை இயக்கி வைப்பதுடன், அதில் பயணமும் செய்யவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கான விழாமேடையில் மாநில ஆளுநர் பி.சதாசிவம், மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அமர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply