சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் பந்தளம் அரண்மனை முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம்வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேசியசெயலாளர் ஷோ தலைமை தாங்கினார்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

சபரிமலை ஆச்சாரத்தை மீறி இந்துபெண்கள் யாரும் செல்ல முயற்சிக்க மாட்டார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டு அரசு இந்துவிரோத அரசாக மாறி இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சிசெய்கிறது. அது கனவில் கூட நடக்காது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை என்ன விலைகொடுத்தும் தடுப்போம். கேரளாவில் இந்த அரசுதான் கடைசி கம்யூனிஸ்டு அரசாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply