கேரளா தலைமை செயலகத்தில் இன்றுநடந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்துபோயின. இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை ஆளும் கட்சி அழிக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

கேரளாவில் நேற்று ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் பட்ஜெட்டுக்கான நிதிமசோதா முதலில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த முடிவை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ சதீஸன் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல்செய்து பேசினார். அதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விஅடைந்தது.

இந்தநிலையில் கேரளா தலைமை செயலகத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகின. ஆளும்கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மற்றம் பாஜகவினர் இன்று தலைமைசெயலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது திடீரென பாஜகவினர் சிலர் தலைமை செயலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.