கேரள சட்டமன்றதேர்தலில் பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக சார்பில் முதல்வர் வேட்பளாகர மேட்ரோமேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஒரேகட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 140 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கேரளமாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஏப்ரல் 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் மூன்றாவது அணியாக உருவாக பாஜக தீவிரமாக முயன்றுவருகிறது. மக்கள் மத்தியில் ஆதரவைதிரட்ட மேட்ரோ மேன் ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.

கேரளாவைப் பொறுத்தவரை தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்ட இடதுசாரிகள் ஒருஅணியாக உள்ளது. அவர்களை எதிர்த்து காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாக உள்ளன. இந்த இருகட்சிகளுக்கு மத்தியில் மூன்றாவது அணியாக உருவாக வேண்டும் என்றே பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

கடந்த காலங்களைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி ஆகிய இரண்டும்தான் கேரளமாநிலத்தை மாற்றிமாற்றி ஆட்சி செய்துள்ளன. அவர்களை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கேரளாவில் காலூன்ற முடியவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில்கூட 98 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவால் வெறும் ஒற்றை தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது.

தற்போது மேட்ரோ மேன் ஸ்ரீதரனை கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.டெல்லி மெட்ரோ ரயில், நாட்டின் பலசிக்கலான பாலங்கள் என முக்கிய கட்டுமானங்களை உருவாக்கியவர் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜகவின் இணைந்தார். கேரளமாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணி செய்யவில்லை என்றும் கேரளாவுக்கு வளர்ச்சிக்கு ஏதாவதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணைவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்றும் சூசகமாக அப்போதே தனதுவிருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இடையே ஒரு ஒரு சிக்கல் மட்டும் இருந்தது. மேட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு இப்போது 88 வயது ஆகிறது. 75 வயதைக் கடந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவது, முக்கிய பொறுப்புகளை வழங்குவது ஆகியவற்றில் மோடி-அமித் ஷா தலைமைக்கு உன்பாடு இல்லை. இருப்பினும், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த விதிகளையும் அவர்கள் தளர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் மேட்ரோ மேன் ஸ்ரீதரனை முன்னிறுத்த கட்சி முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே சபரிமலை போராட்டத்திலும் கூட கேரளாவில் பாஜகவுக்குக் கொஞ்சம் ஆதரவு கிடைத்தது. அத்துடன் நல்ல நிர்வாகி என்றபெயர் எடுத்துள்ள ஸ்ரீதரனும் கட்சியில் இணைந்துள்ளதால், இது கட்சிக்கு பூஸ்ட்கொடுக்கும்

Comments are closed.