கைத்தறி நெசவுத்துறையை ஊக்குவிக்க அன்றாடவாழ்வில் கைத்தறி ஆடைகளை அணியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடுமுழுவதும் நேற்று கைத்தறிதினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்த படியாக ஜவுளிதுறை அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக கைத்தறியை நம்பி ஏராளமான நெசவாளர்கள் வாழ்கின்றனர். அந்தத்துறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.

நாடுமுழுவதும் கதர் ஆடைகளை அணிவது பேஷனாக மாறவேண்டும். நாட்டுமக்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் கைத்தறி ஆடைகளை அதிகம் அணியவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகு கைத்தறி துறையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2015 ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்முறையாக கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.

Leave a Reply