உ.பி யில் முஸ்லிம்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி இந்துக்குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறுவதாக கூறப்படும் விவகாரத்தை பாஜக தீவிரமாக கையாளத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கள ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்துள்ள பாஜக, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித் துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கைரானா பகுதியில் ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தலுக்கு அஞ்சி அங்கு வசித்து வந்த 346 இந்துகுடும்பங் கள் ஊரைவிட்டு வெளியேறியதாக பாஜக எம்பி ஹுக்கும்சிங் கடந்தவாரம் தகவல் வெளியிட்டார்.

கடந்த 2013-ம் ஆண்டு முசாஃபர் நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவரான இவர், கைரானாவில் முஸ்லிம்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே இந்துக்கள் ஊரைவிட்டு வெளியேறியதாகக் கூறினார்.

இதுகுறித்து விசாரிக்குமாறு, உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி.,க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தர விட்டுள்ளது. மக்கள் வெளியேறியதை காவல்துறை உறுதிப்படுத்தாத நிலையில், இவ்விவகாரத்தை பாஜக தீவிரமாக கையாளத் தொடங்கியுள்ளது.

கைரானா நிலவரம் குறித்து நேரில் ஆய்வுசெய்ய, கட்சி சார்பில் 7 பேர் கொண்டகுழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது. இக்குழுவினர் கள ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.

அலகாபாத்தில் நேற்று நடை பெற்ற பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற போது செய்தி யாளர்களிடம் இதுகுறித்து கூறிய அவர், ‘சட்டம் ஒழுங்கு அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து மொத்தமாக வெளியேறுவது ஜனநாயகத்துக்கு நல்ல தல்ல. அதனால்தான் இவ்விவகாரத்தை பாஜக மிக முக்கியமானதாக கருதுகிறது’ என்றார்.

‘நாட்டின் பெரியமாநிலமான உ.பி.யில் ஆட்சி நிர்வாகம் சரியில்லை. கைரானா பகுதியில் வன்முறை சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக மக்கள் வெளியேறுவது மிக முக்கியமான பிரச்னை’ என, பாஜக தலைவர் அமித் ஷாவும் குறிப்பிட்டார்.

Leave a Reply