கொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலைவர் அரசியல் செய்யாமல் அரசுக்கு முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகள் 32 லட்சம்பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதிவழங்கி உள்ளதாக கூறினார்.
சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழக அரசுக்கு, எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின், ஒத்துழைக்க வேண்டும் என்றார். பிரதமர் மோடியின் சிறப்பான செயல் பாட்டால், உலக நாடுகளைவிட இந்தியாவில் கொரோனாபரவல் குறைவு என்றும் முருகன் கூறினார்.

Comments are closed.