கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதில் இந்திய அரசின்பணிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு உலகசுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்தியபிரதிநிதி ஹெங்க் பெகெதம், டில்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர்களை சந்தித்துபேசினார்.

இதன் பின்னர் ஹெங்க் பெகெதம் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதில் இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருந்து குறிப்பாக பிரதமர் அலுவலகமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுவருகிறது என கருதுகிறேன். இந்த நடவடிக்கைகள் மகத்தானது. எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களினால், இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.

அனைத்து துறைகளையும் வைத்து வேலை வாங்கியது என்னை ஈர்த்துள்ளது.இந்தியாவில், சிறந்த ஆராய்ச்சிவசதி உள்ளது. ஐசிஎம்ஆர் உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுகிறது. அவர்களால், வைரசை தனிமைப்படுத்த முடியும். ஆராய்ச்சிசமுதாயத்தில் இந்தியா தொடர்ந்து செயலாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.