கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் என பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.

காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் என்று பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.

அண்மையில் தமிழகத்துக்கு வருகைதந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், நதி நீர் இணைப்பு திட்டத்தைப் பற்றி பேசியதாகவும், அதன் படி, கோதாவரி ஆற்றில் இருந்து வீணாக கடலில்கலக்கும் நீரை கிருஷ்ணா நதிக்கு கொண்டுவந்து அங்கிருந்து நேரடியாக தமிழகத்துக்கு கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply