ஜம்மு – காஷ்மீரில் நடந்த கோர தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்; அதில் இரண்டுபேர், பீஹாரைச் சேர்ந்தவர்கள். நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த அவர்களது குடும்பத்தாருக்கு, நாட்டு மக்களின் சார்பில் இரங்கலை தெரிவிக்கிறேன்.இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாட்டுமக்களின் மனதில், கோபக் கனலை ஏற்படுத்தியுள்ளது; அது, என் மனதிலும் தீயாக பற்றி எரிகிறது.

இந்த தாக்குதலுக்கு சரியானபரிகாரம் விரைவில் தேடப்படும். நம் படைகள் சரியான பதிலடியைக் கொடுக்கும்.இங்கு பல்வேறு திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களால், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும் என்ற இரட்டை கொள்கைகளுடன், தே.ஜ., கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.

 

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் – பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள பீஹாரில், பல்வேறு அரசு திட்டப்பணிகள் துவக்க விழா, நேற்று நடந்தது.பலதிட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், இந்தநிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது.

Leave a Reply