ஃபைசாபாத் நகரத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் `அயோத்தியா’ என்னும் பெயர்மாற்றத்தை அறிவித்தார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். தற்போது `அயோத்தியா’ எனப் பெயரிட பட்டிருக்கும் அப்பகுதியிலும், உத்தரபிரதேசத்தின் வேறு சில கோயில்கள் நிறைந்த பகுதிகளிலும், இறைச்சியையும் மதுவையும் தடை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

இறைச்சி, மது ஆகியவற்றை தடை செய்வதற்கான காரணம் குறித்து பதிலளித்த அவர், “மாநிலத்தின் பலபுனித இடங்களில் வசிக்கும் துறவிகள் இறைச்சிக்கும், மதுவுக்கும் தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுத்திருக் கிறார்கள். உதாரணமாக ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் இருக்கும் சாதுக்கள் இறைச்சிக்கும், மதுவுக்கும் தடைவிதிக்குமாறு கேட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

முதல்வர் யோகி ஆதித்யநாத், “மக்களின் விருப்பத்துக்கேற்ப அலகாபாத் நகரத்தின்பெயர் `பிரயாக்ராஜ்' என மாற்றம் செய்யப்படும்" என்று கடந்த மாதம் அறிவித்தார். அதற்குப்பிறகு,ஃபைசாபாத்தை அயோத்தியா எனப் பெயர்மாற்றம் செய்திருக்கிறார் ஆதித்யநாத். “அயோத்தியா என்னும் பெயர் நமதுமரியாதை, பெருமை, குலப் பெருமைக்கான குறியீடு. அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது. கடவுள் ராமனின் புகழ் இங்கு எப்போதும் இருப்பதை உறுதி செய்வேன்” என்றார் 

Leave a Reply