இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் சவாலை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தனது உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தனது உடற் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அதனை பிரதமர் நரேந்திரமோடி, தோனி உள்ளிட்டோருக்கு உடற் தகுதிசவால் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கோலிக்கு தெரிவித்த பதிலில் விரைவில் தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தனது பிட்னஸ் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். அதில்  அதிகாலையில் பசுமையான சூழலில் யோகாசெய்யும் பிரதமர் நரேந்திர மோடி அதன்பின் படிப்படியான உடற் பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவரின் இந்த உடற்பயிற்சி தான் இன்னமும் வலிமையான மனிதர்தான் என்பதைகாட்டும் வகையில் அமைந்துள்ளது. பிரதமரின் இந்தபுதிய உடற்பயிற்சி வீடியா சமூக வளைதளங்களில் வைரலாக வருகிறது.

Leave a Reply