கோவா மாநிலத்தில் நாங்கள் தலைமையைமாற்ற விரும்ப வில்லை; மொத்த கட்சியும் பாரிக்கருக்கு ஆதரவாகவே உள்ளது'' என மாநில பாஜக மூத்த தலைவர் ராஜேந்திர ஆர்லேகர் தெரிவித்தார்.


கோவா முதல்வர் பாரிக்கர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவரது பொறுப்புகளை கவனித்துக்கொள்ள யாரையேனும் நியமிக்க வேண்டும் என எதிர்க் கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மேலும், காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்கள் இருவர் பாஜகவில் இணைந்து, அமைச் சர்களாக பதவியேற்க கூடும் என்றும் பேசப்படுகிறது.


இந்நிலையில், இதுதொடர்பாக ராஜேந்திர ஆர்லேகர் கூறியதாவது:
பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளின் துணையுடன் இங்குள்ள சூழல்களை கையாளும்திறன் பாரிக்கரிடம் உள்ளது. கோவாவில் நாங்கள் தலைமையை மாற்ற விரும்ப வில்லை. மொத்த கட்சியும் பாரிக்கருக்கு ஆதரவாக இருப்பதால் தலைமை மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

Leave a Reply