கோவையில், 520 கோடி ரூபாய் செலவில், இஎஸ்ஐ., மருத்துவக்கல்லுாரி அமைக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல், வகுப்பு துவங்கு வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, பிப்., 1ல் கல்லுாரி துவக்கவிழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. 'பிரதமர் மோடி கலந்துகொண்டு, கல்லுாரியை துவக்கிவைக்க உள்ளார்' என, இ.எஸ்.ஐ.,. மருத்துவக் கல்லுாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த, மூன்று நாட்களுக்கு முன், டில்லியில் இருந்து கோவைவந்த உளவுத்துறை அதிகாரிகள், பிரதமர் விழாவுக்கான மேடை, அவர் வந்துசெல்லும் பாதைகள் குறித்து ஆய்வு நடத்தி சென்றுள்ளனர்.மருத்துவ கல்லுாரி துவக்க விழாவுக்கு வரவிருக்கும் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., க  நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply