அனைத்து மாநிலங்களின் காவல் துறை டி.ஜி.பி மற்றும் ஐ.ஜி-க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக் கிழமை ஆலோசனை நடத்தினார்.அனைத்து மாநில காவல்துறை டிஜிபி, ஐஜி-க்களின் வருடாந்திர மாநாடு, குஜராத்மாநிலம், கெவாடியா நகரில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள்குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சனிக் கிழமையும் விவாதங்கள் நடைபெறவுள்ளன. அப்போது, தேசிய காவல் துறை நினைவகம் தொடர்பான சிறப்பு அஞ்சல்தலையை பிரதமர் வெளியிடவுள்ளார். மேலும், இணைய ஒருங்கிணைப்பு மையத்தின் இணைய தளத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும், உளவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு, குடியரசுத்தலைவரின் பதக்கங்களையும் பிரதமர் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

Leave a Reply