சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்த நாளையொட்டி, இன்று பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜிராஜே போன்சலே இவர் பிப்ரவரி 19, 1630ல் பிறந்தார். மராட்டியபேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார்.

சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் ஆகியோரின் இளையமகன் ஆவார். அவர் புனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார்.

சத்ரபதிசிவாஜி மகராஜ் அவரின் 390வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்களில் ஒருவரும், துணிச்சல்மிக்க வீரராகவும், சிறந்தநிர்வாகியாகவும் திகழ்ந்த சத்ரபதி சிவாஜி மகராஜின் ஜெயந்தியையொட்டி, அவருக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

அவரது வாழ்க்கை லட்சக் கணக்கானோருக்கு ஊக்கம் அளிப்பதாக இப்போதும் உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர்பக்கத்தில் தெரிவித்தார்..

Comments are closed.