சுமார் ரூ.2,000 கோடி செலவில் மும்பை அருகே அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜி நினைவகம் அமைப் பதற்கான அடிக்கல் நாட்டுவிழா அடுத்தமாதம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார் என்று முதல்வர் தேவேந்திரா பட்நவிஸ் தெரிவித்தார்.


இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியதாவது: வீர சிவாஜிக்கு நினைவு சின்னம் அமைக்கும் பணி மே மாதம் ஆரம்பிக் கப்படும். தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார். அதற்கான தேதி விரைவில் இறுதிமுடிவு செய்யப்படும். 2019ம் ஆண்டு இறுதிக்குள் இந்தநினைவகம் அமைப்பட்டு விடும். இந்ததிட்டத்துக்கு தேவையான நிதி கைவசம் உள்ளது. அத்துடன் திட்டத்துக்கான அனுமதி அனைத்து துறைகளிலும் இருந்தும் எற்கனவே பெறப்பட்டுவிட்டது. அதனால் 40 மாதங்களுக்குள் இந்த திட்டம் முடிக்கப்படும்.

சிவாஜி நினைவகம் அமைக்கப் பட்டால் அது இந்த மாநிலத்தின் பெருமையை தெரிவிக்கும் சின்னமாக விளங்கும். நினைவகத்தின் வடிவமைப்பு மிகவும் பிரமிக்கவைக்கும் வகையில் இருக்கும். சத்ரபதி சிவாஜியின் சிலையை பார்த்தவுடன் மக்கள் பணிந்துகும்பிடும் வகையில் அமைக்கப்படும். மொத்தத்தில் அனைத்து தரப்புமக்களும் பாராட்டும் வகையில் சத்ரபதி சிவாஜி நினைவகம் அமையும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

இந்த திட்டத்துக்கு ரூ.1,900 முதல் ரூ.2,000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.100 கோடியும் 2016-17ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.70 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. நினைவகத்தில் சத்ரபதி சிவாஜியின் 192 மீட்டர் உயரம் கொண்ட சிலை அமைக்கப் படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply