1984-ஆம் ஆண்டு,ஆகஸ்ட் 15. அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் (ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அவர்கள் மாமனார்)இதய அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பினார். அடுத்த நாள் தெலுங்கு தேச எம்எல்ஏ
N.பாஸ்கர ராவ்,N.T.ராமாராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து கவர்னர் தாக்கூர் ராம்லாலை சந்தித்து என்டிஆரின் தெலுங்கு தேசத்தை விட தங்களிடம் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்களென்றும்,N.T.ராமாராவ் ஆட்சியை கலைத்துவிட்டு,தன்னை முதல்வராக்கினால் தனது பலத்தை நிரூபிப்பதாக ஆகஸ்ட் 15 -இல் (1984) கூறினார்.
அதறகாகவே காத்துக் கிடந்த கவர்னர் N.பாஸ்கர ராவை 16-ந்தேதியே முதல்வராக்கினார்.

பெரிய அளவிலான அறுவை சிகிச்சை முடிந்து மிகவும் பலவீனமான நிலையில் வீல் சேரில் உட்கார்ந்த படியே தனது ஆதரவு எம்எல்ஏ., க்களுடன் கவர்னரை சந்திக்கச் சென்றார்.ராஜ்பவனில் அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கைது செய்யப் பட்டனர். போலீஸ் அறிக்கையிலேயே 159 எம்எல்ஏக்கள் (292)இருந்ததாக கூறியிருந்தனர்.
இந்த எண்ணிக்கையே மெஜாரிட்டியை விட அதிகமானதுதான்.

என்.டி.ராமராவ் மூன்று நாள் தான் அவகாசம் கேட்டார்.
அவருக்கு அவகாசம் கொடுக்கப் படவில்லை.ஆனால் N.பாஸ்கர ராவுக்கு ஒரு மாதம் அவகாசம்(16August, 1984-16 September, 1984)அளித்ததுதான் வேதனையான வினோதம்.இந்த கலைப்பிற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களில் G.K. மூப்பனாரும் (AICC General Secretary)ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது!!!

அப்போதுதான் இந்திரா பிரியதர்ஷினி சிக்கிம் அரசையும்,
ஜம்முகாஷ்மீர் அரசையும் இதே பாணியில் கலைத்திருந்தார். .
இதன் பிறகு எதிர்க் கட்சித் தலைவர்களையெல்லாம்(17 கட்சிகள்)என்டிஆர் ஒன்று கூட்டினார்.இந்த விஷயத்தில் சோ.ராமசாமி
அவர்கள் முக்கிய பங்காற்றினார்.அவருடைய அறிவுரையின் பேரில்,இதற்கெல்லாம் காரணமான இந்திராவை எதிர்த்துப் போராட டில்லிக்கே செல்ல முடிவெடுக்கப் பட்டது.ஹைதராபாத்திலிருந்து என்டிஆர் ஆதரவு எம்எல்க்களை தனி விமானத்திலேற்றிக்
கொண்டு நேராக டில்லிக்குச் சென்றார்.

வீல் சேரில் N.T.ராமாராவ் தனது 161 எம்எல்ஏக்களுடன்(கூட்டணி ஆதரவுடன் சேர்த்து) தங்களது சட்டசபை உறுப்பினர் அட்டைகளை தூக்கிப் பிடித்தவாறு ஊர்வலமாகச் சென்று ஜனாதிபதி ஜெயில்சிங்கை சந்தித்து மனு அளித்தனர்.ஜெயில்சிங் என்டிஆரை சந்திக்க நேரம் ஒதுக்கியதே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.ஏனெனில் ஜனாதிபதி பாத்ரூம் போவதானால் கூட இந்திராவின் அனுமதி தேவைப்பட்ட காலகட்டமது. காட்சிகள் தலைநகர் டில்லிக்கு மாறியதால் எல்லா மாநில செய்தியாளர்களும் பிரதமர் இந்திராவைக் கண்டித்தனர்.

25 நாடுகளிலிருந்து வந்திருந்த டிவி செய்தி நிறுவனங்கள் அந்த ஊர்வலத்தை நேரடியாக ஒளிபரப்பி இந்தியாவின் மானத்தை வாங்கினார்கள். வீல்சேரில் வந்த என்டிஆருக்கு மக்களின் அனுதாபம் பெருகியது.இந்திராவுக்கு எதிர்ப்பு வலுத்தது.கர்நாடகாவில் ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டேவின் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் எம்எல்ஏக்கள் பெங்களூரில் தங்க வைக்கப் பட்டனர்.N. பாஸ்கர ராவ் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.

மீண்டும் N.T.ராமாராவ் முதல்வரானார்.இந்த நிகழ்வு  ஆந்திர மாநில மக்களின் மனதில் காங்கிரஸ் மீது வெறுப்பு வர காரணமானது.
இன்று வரை N.பாஸ்கர ராவுக்கு துரோகிப்பட்டம் துரத்திக் கொண்டிருக்கிறது.அரசியலில் அதன் பிறகு அவர் விளங்கவில்லை.கம்மம் தொகுதியில் பாரளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் (1998-99)தேர்தெடுக்கப்பட்டதை தவிர.மக்களே பேச்சு வழக்கில் துரோகி என்பதற்கு N.பாஸ்கர ராவ் பெயரையே உபயோகித்தனர் .

காங்கிரஸின் உறுதியான கோட்டையாகக் கருதப்பட்ட ஆந்திரா கை நழுவிப் போனது இதனால்தான்!!! இன்றைய ஆந்திர மாநில முதல்வர் Dr.நாரா சந்திரபாபு நாயுடு அந்த துரோகிக்கு இணையான துரோகி N.T.R பொருத்தவரை!!!
To date,he remains active in state politics.

Comments are closed.