பாஜக சார்பில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னிதியோல் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். பஞ்சாப்பில் மே 19-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் முன்னிலையில் கடந்த 23-ம்தேதி பாஜகவில் இணைந்த நடிகர் சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

நடிகர் சன்னி தியோலை எதிர்த்து குர்தாஸ்பூர் தொகுதியில் மாநிலகாங்கிரஸ் தலைவர் சுனில்ஜகார் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 26-ம்தேதி சுனில் ஜகார் தனது வேட்புமனுவை தாக்கல்செய்தார். இந்நிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து நடிகர் சன்னி தியோல் வாழ்த்து பெற்றார். இன்று காலை அவர் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

சன்னிதியோல் குறித்து பிரதமர் மோடி டுவிட்:

நடிகர் சன்னி தியோலை சந்தித்த புகை படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, சன்னிதியோல் மிகவும் பணிவுடையவர் , நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். குருதாஸ்புர் தொகுதியில் வெற்றிபெறுவார் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply