கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்துவயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதனைத் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வுமனுவை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர். எப். நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா அமர்வு விசாரித்தது. இரு தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6 ஆம் ​தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை  ஒத்திவைக்கப்பட்டது.

இந்தவழக்கில் இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்தவழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவித்தார். 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆதரவாகம், நீதிபதிகள் ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான பிரச்சனை இந்தகோவிலில் மட்டும்அல்ல, மசூதிகள் மற்றும் பார்சி சமயத்திலும் உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். மதம் என்றால் என்ன என விவாதிக்கவேண்டும் என பெரும்பாலான மனுதாரர்கள் கோரியதையும் தலைமை ​நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டி உள்ளார்.

இதனிடையே, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த ஆண்டு நீக்கியதற்கு தடை ஏதும் உச்ச நீதிமன்றம் இன்று விதிக்கவில்லை. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு, வழக்கு விசாரணையை மாற்றியுள்ளதன்  மூலம், அனைத்து தரப்பினருக்கும் புதியவாய்ப்பு கிடைத்துள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார்.

நம்பிக்கை மற்றும் நடைமுறை தொடர்பான கேள்விகள், சபரிமலைக்கு பெண்கள் செல்வது, மசூதிகளில் தொழுகைநடத்த பெண்களுக்கு அனுமதி, கோவில்களில் அனுமதி குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் என்றும் தலைமை நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரமுகர்கள் கூறிய கருத்து.

சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு உச்ச நீதிமன்றத்தின் முடிவு குறித்து தெரிவிக்கையில், 

“7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இது பக்தர்களின் நம்பிக்கைக்கு வலுசேர்க்கிறது” என்றார்.

பாஜக மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரன் இதுகுறித்து பேசுகையில், 

“கேரள அரசு இளம்பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. பெண்கள் கோயிலுக்குள் செல்ல போலீஸார் உதவிசெய்தால், அது பக்தர்களின் நம்பிக்கையை பாதிக்கும். அதனால், கடும்விளைவுகள் ஏற்படக்கூடும். இதனால், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கும்வரை அரசு காத்திருக்க வேண்டும். ஒருவேளை, தடை செய்யப்பட்ட வயதுப்பெண்கள் தரிசனம் செய்ய முயற்சித்தால், அரசு அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்றார்.

காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவிக்கையில், “மாநில அரசு இளம் பெண்களுக்கு பாதுகாப்பளித்து, சபரிமலையில் தரிசனம்மேற்கொள்ள உதவி செய்து எந்தப் பிரச்னையையும் கிளப்பக் கூடாது” என்றார்.

 

Comments are closed.