ஒவ்வொரு ஏழை எளிய மக்களின் வீடுகளில் கழிப்பறை, சமையல் எரி வாயு இணைப்பு வழங்கவேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். பொருளாதார தேக்கநிலை தற்காலிகமானது தான். பெரும்வளர்ச்சி விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது; செல்லாத நோட்டு அறிவிப்பு மூலம் கறுப்புபணம் வெளியே கொண்டுவரப்பட்டது. ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் கொண்டு வருவதற்கு வாய்ப்பும் அளித்தோம். ஒருமித்த கருத்துடன் ஜிஎஸ்டி. சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய பொருளாதார தேக்கநிலை தற்காலிகமானது தான். நேரடி வரி விதிப்பு முறையில் எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. சவாலான பிரச்னைகள் தரும் எந்தமுடிவையும் அச்சமின்றி எடுப்போம். ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை ,ரயில் போக்கு வரத்து இணைப்பு வசதி ஏற்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு ஏழை ,எளியமக்களின் வீடுகளிலும் கழிப்பறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி யுள்ளோம். இவ்வாறு ஜெட்லி கூறினார்.

 

Leave a Reply