சட்ட சபை தேர்தல் நெருங்கும் வேளையில் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் அவர் அதை எல்லாம் மறந்து விட்டு சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சரத் குமாருக்கு அவரது சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கரு. நாகராஜ், தலைமை நிலைய செயலாளர் ஐஸ் கவுஸ் தியாகு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜா, மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பிரசாத், மாநில மகளிர் அணியின் துணை செயலாளர் டாக்டர் ஜெமிலா, நிதி ஆலோசர் ராஜசேகர், மாநில மாணவர் அணி செயலாளர் சிம்மூன் கிரேஸ் ஆகிய 7 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply