ஜூன் 9 2015 அன்று இந்திய ராணுவத்தை சேர்ந்த 21 பாரா சிறப்புபடையை சேர்ந்த இரண்டு அணிகள் மியான்மார் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தி பயங்கரவியாதிகளின் முகாம்களை அழித்தனர். மியன்மாரில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தபோது, பாக்கிஸ்தான் ஒன்னும் மியான்மார் கிடையாது என்று நக்கல் அடித்தது பாகிஸ்தான்.(M)
….
யூரி தாக்குதலுக்கு பின்னர் .பாகிஸ்தானுக்கு மறக்கமுடியாத பாடம் கற்றுக்கொடுக்க முடிவானது. எண்ணற்ற முறை ஒத்திகை பார்க்கப்பட்டு ..மிக சாதூர்யமாக அரங்கேற்றப்பட்ட அதிரடிதாக்குதல் இது…பாகிஸ்தானை எங்கெங்கு அடித்தால் யாருக்கெல்லாம் வலிக்கும் என்று பலமுறை அனலைஸ் பண்ணப்பட்ட விஷயம் இது..(u)
….
2015 ஆண்டு வாக்கிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்பர்ஸுயுட் , சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடக்க வாய்ப்பு வருமென்று எதிர்பார்த்து அதற்கான ,டிரைனிங் / கன்டிஜன்ஸி ப்ளானிங்க் / ப்ளான் ஏ,மற்றும் பி டிராயிங் போர்ட் வரைபட திட்டம் என்று ராணுவத்தினர் தயாராக ஆரம்பித்துவிட்டனர்.(r)

எந்த வழியில் இன்ஃபில்டர்ரேஷன் அதாவது உள்ளே போக வேண்டும் எந்த வழியில் எக்ஸ்ஃபில்டர்ரேஷன் அதாவது இந்திய பகுதிக்கு திரும்புவது எத்தகைய (டிரைரேஷன்) உணவு, குடி தண்ணீர், எலக்ட்ரானிக் கருவிகள், டீடைல் மேப்புகள், ஜிபிஎஸ் கருவிகள், ஆயுதங்கள், என்ன பிரச்சனைகள் , பாகிஸ்தான் ராணுவம் குறுக்கிட்டால் என்ன செய்வது என்பது முதல்.. சங்கேத வார்த்தைகள் வரை ஒருமுழு திட்டமும் தயார் செய்யப்பட்டது. ,(a)

நம் கமாண்டோக்கள் பாகிஸ்தான் பகுதியில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது காயம் பட்டவரையோ அல்லது வீர மரணம் அடைந்த வருடைய உடலையோ பாக்கிஸ்தானில் விட்டுவிடாமல் எப்படி இந்திய பகுதிக்கு கொண்டு வருவது போன்ற விஷயங்களையும் உள்ளடக்கிய ப்ளான் B வரையில் தயார் செய்யப் பட்டது. (l).

பாகிஸ்தானியரிடம் இந்திய சோல்ஜர் மாட்டினால் கதி என்ன ஆகும் என்பது உலகிற்கே நன்றாக தெரியும். பாகிஸ்தான் தன் எல்லையில் காட்டு மிராண்டித்தனமான ராணுவத்தை வைத்திருக்கிறது. இவர்கள் கண்ணில் படாமல்.. தீவிரவாதிகளின் உள்ளே இருக்கும் தூரம் வரை .பலகிலோ மீட்டர் ஊடுருவிசென்று அழிக்க வேண்டும். இதற்கான ஆயுதங்களை இவர்களே சுமக்க வேண்டும். பாகிஸ்தானியர் கண்ணில் படாமல்சென்று வரவேண்டும். (i)

29/9/16 நள்ளிரவுக்கு பின்னர் ஆரம்பித்த இந்த ஆபரேஷனில் ப்ளான் படி பல கிலோ மீட்டர் வரை பாக் ராணுவ தளங்கள் தாண்டி சென்று தூங்கிக்கொண்டிருந்த தீவிரவாதிகளை, (அவர்களின்) கடவுளிடம் அனுப்பி வைத்த போது.. பாக் ராணுவத்தினர் இருவர் துப்பாக்கி சூட்டில் இறந்துபோக.. மொத்தம் 35 /40 தீவிரவியாதிகள் கொல்லப்பட்டனர் .. இந்திய தரப்பில் உயிர்சேதம் ஏதும்மில்லை. தாக்குதலில் ஈடுபட்ட அனைவருமே பத்திரமாக இந்திய எல்லைக்குள் குறிப்பிட்ட நேரத்தில் திரும்பினர்.(d)

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி மேலும் சிலவார்த்தைகள். (h)
….
எல்லை தாண்டி போய் பாகிஸ்தானியர்களை இந்திய பாரா கமாண்டோக்கள் உதைப்பது என்பது இந்திய பாகிஸ்தானிய எல்லைகளில் அவ்வப்போது நடப்பதே.. அதில் ஒன்றும் புதுமை இல்லை..ஆனால் சென்ற ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கொஞ்சம் வித்தியாசமானது. பலபுதுமைகள் நிறைந்தது. அந்த புதுமைகள் என்னவென்றால்…(a)
……
இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கொஞ்சம் பெரிய அளவில் நடத்தப்பட்டது. முதன் முறையாக இந்திய ராணுவத்தின் DGMO மீடியா முன்தோன்றி ராணுவ நடவடிக்கை நடத்தினோம் என்று கூறியது. (r)

(இதற்கு முன்னர் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் ரகசியமாக நடந்தேறியது.. யாரவது கேட்டால் நாங்கள் அப்படி ஏதும் நடத்தவே இல்லை என்று இந்திய ராணுவமும் கூறிவிடும்.. ஆனால் இம்முறை) (b)

இந்திய பிரதமரே சர்வதேச அரங்குகளில்.. அட..ஆமாய்யா..நான்தான் ஆர்டர் கொடுத்தேன்..என் உத்தரவின் பேரில் தான் நடந்தது.. இப்போ என்ன அதுக்கு என்று அனாயசமாக (அசாதாரண body language உட்பட) கூறியது எல்லாம் கொஞ்சம் நமக்கு புதுமை யானவை. (a)
……
பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் குவாஜா ஆசிப் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் அணு ஆயுதபோரை சந்திக்க நேரும் என்று கூறிக்கொண்டிருதார்.. நவாஸ் ஷ்ரிஃப் வீர முழக்கம் இட்டார்.. இப்போது அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்று யாருக்காவது தெரியுமா ?(b)
….
பயங்கர அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தானின் தலையாய தந்திரம் என்னவென்றால் இப்படி ஒருவிஷயம் நடக்கவே இல்லை என்று சாதித்தது தான் . இந்திய அரசியல் வாந்திகள் சில பலரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததற்கு என்ன ஆதாரம் என்று ஊடகங்களில் கேட்டனர் .(u)
….
CNN நியூஸ் சானலின் பத்திரிக்கையாளர் ஒருவர் (மனோஜ் குப்தா என்று ஞாபகம்) சரியாக ஐந்து நாட்கள்கழித்து பாகிஸ்தானின் மிர்பூர் பகுதி போலீஸ் சூப்பிரண்டன்ட்க்கு ( குலாம் அக்பர்) போன் செய்து தான் பாகிஸ்தான் ஐஜி பேசுவதாகவும் என்ன நடக்குது உன் ஏரியாவில் என்று அதிகார தோரணையில் கேட்க….

குலாம் அக்பர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிய விபரங்களையும் இறந்தவர் எண்ணிக் கையையும் சவப்பெட்டி விபரங்களையும் உளறிவிட அந்த உரையாடல் முழுவதும் ரிக்கார்ட் செய்யப்பட்டு டிவி சானல்களில் ஒளி /ஒலி பரப்ப பட்டது .

அதன் பின்னரும் இந்திய அரசியல் வாந்திகள் சிலபலர் வீடியோ ஆதாரங்கள் கேட்டனர் என்பது தான் உச்ச பட்ச காமெடி .

இங்கிருக்கும் பாகிஸ்தானிய கைக்கூலிகளுக்கும் அபிமானிகளுக்கும் நான் கூற வருவது என்னவென்றால் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் இனிமேல் அடிக்கடி..இதைவிட பலமாக நடக்க வேண்டும் என்பது தான்.
……
ஜெய் ஹிந்த்

Leave a Reply