ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இன்று சர்வதேசளவிலான போர் கப்பல்களின் சாகச அணிவகுப்பு நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில்பார்த்து ஆய்வு செய்தனர்.

கடந்த 4ம்தேதி தொடங்கிய சர்வதேச போர்க் கப்பல்களின் சாகச கண் காட்சியின் 3-வது நாளான இன்று இந்திய முப்படைகளின் தளபதியான குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி கண்காட்சியை நேரில் பார்வை யிட்டார்.

இன்று  காலை விசாகப் பட்டினம் துறை முகத்திற்கு வந்த பிரணாப் மற்றும் மோடிக்கு சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கபட்டது.

பின்னர் குடியரசு தலைவ ருக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கபட்ட  அதிநவீன வசதிகள் கொண்ட படகில் போர்க்கப் பல்களின் அணிவகுப்பை பிரணாப் முகர்ஜியும், மோடியும் அமர்ந்து  பார்வை யிட்டனர். இந்த அணி வகுப்பில் இந்தியா உட்பட பல உலக நாடுகளை சேர்ந்த 75 போர்க்கப் பல்கள் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply