ராமேசுவரம் ஒரு புனிதநகரம். கலாமின் நினைவு நாளில் நடைபெறும் இந்தநிகழ்ச்சியும் ஒரு புனிதமான நிகழ்ச்சி. கலாம் நம்மிடம் விட்டுச்சென்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் சாதனைகள் மூலம் நம்முடைய இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இதயத்தில் வாழும் கலாமுக்கு எதற்கு தேசியநினைவகம் என்று கேட்கலாம். இந்த நினைவகம், கோவில், மசூதி, தேவாலயம்போல வருங்கால சந்ததியினருக்கு இப்படி ஒருமனிதர் வாழ்ந்தார் என்று சொல்வதற்காக எழுப்ப வேண்டியுள்ளது.

சாதாரண மனிதனும் கல்வியால் மிகஉயர்ந்த இடத்துக்கு முன்னேற முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம்.சாதாரண மீனவகுடும்பத்தில் பிறந்து, பல சவாலான பணிகளை செய்து, குடியரசுத்தலைவர் பதவி வரை ஒருசாதாரண மனிதரால் கல்வியால் உயரமுடியும் என்பதற்கு கலாம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. அணுசக்தி விஞ்ஞானத்தை உலகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். கலாமோடு ராமேசுவரம் ஒன்றியுள்ள ஊர் என்பதால் "அம்ருத்' திட்டத்திலும் இணைக்கப் பட்டுள்ளது. ராமேசுவரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ. 48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலாம் நினைவிடத்துக்காக கூடுதலாக இடத்தை ஒதுக்கிதந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியது .

Leave a Reply