லக்னோவில் இன்று நடைபெற்ற 3வது சர்வதேச யோகாசன தினத்தை யொட்டி பிரதமர் நரேந்திரமோடி, 55,000க்கும் மேற்பட்டோருடன் யோகாசெய்தார். மழைபெய்து கொண்டிருந்த நிலையிலும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்தனர். பிரதமருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு யோகா செய்தனர். லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் சபாஸ்தல் மைதானத்தில் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நாட்டுத்தூதர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், யோகா சனம் நமது மனதையும், ஆன்மாவையம் ஒருங்கிணைக்கிறது. உலகத்தையும் தற்போது இணைத்துள்ளது.

நமது உடலின் ஆரோக்கியம் மிகவும்முக்கியம். உடம்பு நன்றாக இருந்தால் தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கமுடியும். சாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அதுபோலத் தான் வாழ்க்கையில் யோகாவும் என்றார் மோடி.

Leave a Reply