சிக்கிம் மாநிலத்தின் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது.

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற பொதுத்தேர்தலுடன், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த திங்கட் கிழமை நடந்தது. இதன்முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக இரண்டு இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான சிகிம் கிரந்திகாரி மோர்ச்சா ஒருஇடத்தையும் கைப்பற்றியது.

போக்லாக்-கம்ராங் தொகுதியில் போட்டியிட்ட சிக்கிம் முதலமைச்சரும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளருமான பிரேம்சிங் தமாங் வெற்றிபெற்றார். மார்டம்-ரும்டெக் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோனம்ஷ் வென்சுங்பாவும், கேங்டாக் தொகுதியில் மற்றொரு பாஜக வேட்பாளர் யங்ஷேரிங் லெப்ச்சாவும் வெற்றிபெற்றனர். சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்முறையாக வெற்றிபெறுவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.