சிட்பண்டு மோசடியில் தொடர்புடை யவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியஅரசு உறுதி அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வாலி சிட் பண்டு மோசடி விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுதீப் பந்தோ பாத்யாயா கைது செய்யப்பட்டார். சாரதாசிட் மோசடியிலும் அக்கட்சியினர் பலருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று மக்களவையில் கேள்விநேரத்தின் போது  காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி மேற்குவங்கத்தில் சிட் பண்ட் திட்டங்களில் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் ஏமாற்றப் பட்டுள்ளனர். இந்த மோசடியில்  பலமுக்கிய அரசியல் பிரகமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். இவருக்கு ஆதரவராக அம்மாநிலத்தை சேர்ந்த இடதுசாரி எம்பிக்களும் குரல் கொடுத்தனர். இதற்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதில் அளித்து பேசியதாவது: முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டுவருவது குறித்து  மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கம்பெனிகள் சட்டப்படி, தனியார் நிறுவனம் அதன் இயக்குநர்கள், அவரது உறவினர்களிட மிருந்தும், குறிப்பிட்ட நிறுவன உறுப்பினர்களிடமிருந்து முதலீடுகளை பெற அனுமதிக்கப் பட்டுள்ளது.  ஆனால், பல நிறுவனங்கள் சட்டவிதிகளை மீறி பொதுமக்களிடமிருந்து வைப்புநிதியை பெற்று வருவதாக  24 கம்பெனிகள் மீது பதிவாளருக்கு புகார்கள் வந்துள்ளன. கம்பெனிசட்டம் 1956 மற்றும் 2013ன் கீழ் நான்கு நிறுவனங்கள் மீது 15 வழக்குகள் பதியப் பட்டுள்ளன.

இவை நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவை குறித்து விவாதிக்க முடியாது. பிறபுகார்களை விசாரணை, சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களை சொத்துகளை முடக்கி அவற்றை ஏலத்துக்குவிட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

ஆனால், சில நிறுவனங்களில் இது சாத்தியப்படவில்லை. சிக்கலான நடைமுறைகள் காரணமாக பணத்தை திரும்பபெறுவதில் பிரச்னைகள் உள்ளன. ஆனால், மோசடியில் ஈடுபட்டவர்கள் எந்தபொறுப்பில் இருந்தாலும், எவ்வளவு சக்திபடைத்தவராக இருந்தாலும் அவர்கள் தப்பமுடியாது. சட்டப்படி அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெட்லி பேசினார்.

Leave a Reply