கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங்கள் கிழமை(ஜன.8)  தொடங்கும் தேசிய பாரம்பரிய சித்தமருத்துவர்கள் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஸ்ரீ பத் நாயக் பங்கேற்க உள்ளார்.


 கன்னியா குமரி விவேகானந்த கேந்திரத்தில் அமைந்துள்ள இயற்கைவள அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பல்வேறு கருத்தரங்குகள், நூல்கள் வெளியீடு, மருத்துவர்கள் கலந்தாய்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. 
இந்நிலையில் அவசரகால உடனடி நோய்களுக்கு வர்மவைத்திய பரிகார முறைகளும், விளக்கங்களும் என்ற தலைப்பில் பாரம்பரிய சித்தமருத்துவர்கள் பங்கேற்கும் தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


  இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள், ஆய்வாளர்கள், வைத்தியர்கள் பங்கேற்க உள்ளனர். வர்மம் தொடர்பான செயல் முறை விளக்கம், வர்மபரிகார முறைகள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதுதொடர்பான சிறப்பு அமர்வுகளில் சித்த வர்ம முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடைபெறும். இதில் மத்திய சித்த, ஆயுர்வேத யோகா மற்றும் ஓமியோபதித்துறை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக் பங்கேற்று பேசுகிறார். 


இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திர இயற்கைவள அபிவிருத்தி திட்டச் செயலர் வாசுதேவ், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வே.கணபதி ஆகியோர் செய்துவருகின்றனர்.

Leave a Reply