'கோட்டை நோக்கிப் புறப்படுவோம்'' என்று கோவையில் பேசியகமலுக்கு, பி.ஜே.பி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை பதில் அளித்துள்ளார். அவர், 'சினிமாவை கோட்டைவிட்ட பின் வேறென்ன கோட்டை கட்ட..?'' என்று கூறியுள்ளார்.

கோவை ஈச்சனாரியில், கமல்ஹாசன் ரசிகர்மன்றத்தின் அகில இந்தியப் பொருளாளர் தங்கவேல் வீட்டுத்திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ''ஓட்டுக்காகப் பணம் பெற்று க்கொண்டு திருடர்களை அனுமதித்துவிட்டோம். அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் மாற்றவேண்டியது நம் கடமை. நாம் நம்முடைய வேலையைச் செய்வோம். என்றைக்காவது நமக்குத் தேவைவரும். அப்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். உங்கள் கையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தைச் சுத்தமாக வைக்கப் போராடுவோம். இந்தச்சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. என்னைப் பார்த்து தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். உங்களுக்குத் தலைமை ஏற்கத்தைரியம் வந்துவிட்டதா என்று நான் கேட்கிறேன்'' என்று பேசியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக பிஜேபி மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர ராஜன் தனது முகநூல் பக்கத்தில், ''கோட்டையை நோக்கிய மனக் கோட்டையை ட்விட்டரில் கட்டினால் என்ன… கோவையில் கட்டினால் என்ன? சினிமாவை கோட்டைவிட்டபின் வேறென்ன கோட்டைகட்ட?'' என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply