ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவரும் மாணவர்கள் போராட்டத்தை அரசியலாக மாற்ற முதலில் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு, சுகவனம், கருப்பண்ணன் போன்றவர்களை அனுப்பியது திமுக.
மாணவர்கள் சுதாரித்துக்கொண்டு அவர்களை விரட்டியடித்தனர்.


அடுத்து 'நமக்கு நாமே' டீம் மற்றும் கருணாநிதி & ஸ்டாலினின் ஃபேஸ்புக், டுவிட்டர் கணக்குகளை கையாளும் அட்மின்கள், 200 ரூபாய்பதிவர்கள் போன்றவர்களை மாணவர்கள் போர்வையில் கூட்டத்தோடு கூட்டமாக கலக்கவிட்டு குறுக்குவழியில் அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது திமுக.

இவ்வகை அரசியல் திமுகவிற்கு புதிது அல்ல. காசுகொடுத்து ஆஸ்திரிய நாட்டில் தபால்தலை வெளியிடவைத்து 'கலைஞரின் தமிழ் சேவையை பாராட்டி ஆஸ்திரிய நாடு தபால்தலை வெளியிட்டது ' என கொஞ்சம்கூட கூசாமல் முரசொலியின் முதல் பக்கத்தில் செய்தி போட்டுக்கொண்ட கட்சிதான்.

போப் ஆண்டவரின் வெப்சைட்டில் யார் வேண்டுமானாலும் தன் பிறந்ததேதி, பெயர், ஈ மெயில் முகவரியை பதிவு செய்தால் அன்றைய தேதிக்கு போப்பாண்ட வரிடமிருந்து ஒரு சிஸ்டம் ஜெண்ட்ரேட்டட் பிறந்த நாள் வாழ்த்து மெயில் வரும். அதை வைத்துக்கொண்டு 'கலைஞரின் பிறந்தநாளுக்கு போப் ஆண்டவர் வாழ்த்து என கலைஞர் டிவியில் பிரேக்கிங் நியூஸ்போட்ட ஆட்கள்தான் இவர்கள்.

சின்னசின்ன விஷயங்களில் கூட ஃபிராடுத்தனத்தோடவே வாழும் இவர்களுக்கு தன்னெழுச்சியாக கூடியிருக்கும் லட்சக் கணக்கான இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஒழுகத்தான் செய்யும்.அதை எப்படியாவது தங்களுக்கு அரசியல் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்ற எந்தஎல்லைக்கும் போவார்கள்.

அது தற்போது பலஇடங்களில் கண்கூடாக தெரிகிறது. ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷம் சேர்ந்தாலும் அது விஷம்தான். அந்த விஷம் பரவிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply