இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகளுக்கு கிடைத்ததுகுறித்து தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஆலோசனையின் பேரிலேயே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். அப்படி இணைப்பு நடந்தபோதே தெரிந்தவிஷயம்தான் இவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும் என்பது. நிபந்தனைகளின் பேரில்தான் இவர்களுக்கு இரட்டை இலைசின்னம் கொடுக்கப்பட்டிருக்கும். அதிமுக.,வின் இந்த அணியை பலப்படுத்தி அவர்களுடன் கூட்டணிவைத்து பாஜக போட்டியிடத்தான் இந்த திட்டம். ஏனெனில் பாஜகவால் தனித்து போட்டியிட்டு வாக்கு பெற முடியாது குறைவான வாக்குகளே அவர்களுக்கு கிடைக்கும் என்பது தெரியும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், இரட்டை இலைச்'சின்னம்'பாஜ., வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply