கேரளாவில் பிஜேபி, ஆர்எஸ்எஸ். செயற் பாட்டாளர்களுக்கு எதிராக இனியும் கண்களை உருட்டினால், சிபிஎம்- காரர்களின் வீட்டிற்கே சென்று அவர்களது கண்கள் பிடுங்கி எடுக்கப்படும் என்று பிஜேபி தேசிய செயலாளர் சுராஜ் பாண்டே கூறியுள்ளார்.

மேலும் அவர், மத்தியில் ஆளுவது பிஜேபி என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். இந்தியாவில் பதினோரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சி பிஜேபி. கேரளாவில் பிஜேபி செயற் பாட்டாளர்களுக்கு எதிராக அக்கிரமம் நடை பெற்றால் மத்திய அரசு தலையிடும்.

தேவைப் பட்டால் மாநில சிபிஎம் அரசைக் கலைக்கவும் செய்வோம். கேரளம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் முன்னாள் பெண்கள் முன்னணி தேசிய செயலாளராகவும் விளங்கிய சுராஜ் பாண்டே கூறினார்.

 

Tags:

Leave a Reply