சிபிஐ எடுக்கும் எந்தமுடிவிலும் அரசியல் தலையீடு ஏதும்கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லியிடம், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதான ஊழல்வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில், சிபிஐ முறையீடு செய்துள்ளது. ஆனால் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மீதான என்கவுன்ட்டர் வழக்கில் ஏன் அதுபோல் முறையிடவில்லை என கேட்கப்பட்டது.
 

அரசியல் தலையீடு கிடையாது :

 

இதற்கு பதிலளித்த ஜெட்லி, வழக்கைப்பொறுத்து சிபிஐ எடுக்கும் முடிவுகள். முறையீடு செய்ய வேண்டுமா, வேண்டாமா என ஒவ்வொரு வழக்கிலும் முடிவுசெய்ய வேண்டியது சிபிஐ தான்.சிபிஐ என்பது விசாரணை துறை. அதன் நிர்வாகத்திலும், முடிவிலும் அரசியல் தலையிட முடியாது என்றார்.

Tags:

Leave a Reply