சிறுபான்மையினர் அதிகம்வசிக்கும் மாவட்டங்கள் அடங்கிய மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அங்கு 50 சதவீதத் தொகுதிகளை பாஜக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றிகண்டது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 352 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதில் சிறுபான்மையினர் அதிகம்வசிக்கும் 79 தொகுதிகளில் 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இது 50 சதவீதத்துக்கும் அதிகமாகும். 2014-ல் பாஜக சிறுபான்மையினர் அதிகம்வசிக்கும் தொகுதிகளில் 34-ல் வெற்றிபெற்றிருந்தது.

அதே நேரத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் 6 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. 2014-ல் காங்கிரஸ் 12 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 6 தொகுதிகளை பாஜகவிடம் இழந்துள்ளது.

இந்த மக்களவைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் மொத்தம் 27 முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். பாஜக சார்பில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் யாருமே வெற்றிபெறவில்லை.

முஸ்லிம் வேட்பாளர்களில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 5, காங்கிரஸ் சார்பில் 4, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டுக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை சார்பில் தலா 3, ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் 2, எல்ஜேபி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஏஐயுடிபி கட்சிகள் சார்பில் தலா ஒருவர் வெற்றி கண்டுள்ளனர்.

இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களில் 20 சதவீதம்பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களை பெற்றுள்ள மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ஜல்பைகுரி, மல்தாகா வடக்கு, கூச்பெஹர், பலூர்கட் வடக்கு, பிஷ்ணுபூர், ஹூக்ளி, புர்த்வான்-துர்காபூர் ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிகண்டனர்.

உ.பி.யில் முஸ்லிம்கள் அதிகம்வசிக்கும் ராம்பூர், நாகினா, மொராதாபாத், சம்பல், அம்ரோஹா தொகுதிகளை சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ்-ஆர்எல்டி கட்சிக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 6 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவர் கூட உ.பி.யில் வெற்றி

Tags:

Comments are closed.