சென்னை கிண்டியில் உள்ள தனியார்நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மாநில சிறுபான்மையினர் அணியின் செயற்குழு கூட்டத்தில் எல்.முருகன் கலந்துகொண்டு பேசினார், சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரி என கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைத்தெறியப் பட்டுள்ளதாக அவர் கூறினார். மதச்சார்பின்மைக்கு ஆதரவளிப்பதே பாஜகவின் கொள்கை என்றும் ராமர்கோவில் கட்டவேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் என்றும் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக அரசியலில் பாஜக தவிர்க்கமுடியாத சக்தியாக திகழ்வதாகக் கூறிய எல்.முருகன், இதற்கு பிரதமர் மோடியின் ஆட்சியேகாரணம் என தெரிவித்தார்.

செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நடிகை குஷ்பு, சாதிமதத்திற்கு அப்பாற்பட்டு மக்களின் நன்மைக்காக உழைத்து வருபவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டினார். பலமுறை மோடிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் தான்பேசியுள்ளதாக கூறிய அவர் தற்போது தமது தவறை உணர்ந்து பாஜகவில் இணைந்து கொண்டதாக குறிப்பிட்டார். சிறுபான்மையினரை வைத்து காங்கிரஸ்தான் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்தார். உத்தரபிரதேசத்திற்கு சென்றுவந்த ராகுல் காந்தி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற முக்கிய பிரச்சனைகளின் போது தமிழகத்திற்குவராதது ஏன் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று குஷ்பு சூளுரைத்தார்.

Comments are closed.