60 வயதிற்கு மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவும், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கிடவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதன்படி ஆண்டுக்கு 1.5 கோடிக்கு குறைவாக ஜிஎஸ்டி செலுத்தும் சிறுவியாபாரிகள் இந்த ஓய்வுதிட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்ததிட்டத்தின் பயன்பெற விரும்பும் வியாபாரிகள் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பதிவுசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர் இதற்கான அறிவிப்புவெளியானது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியது, இத்திட்டத்திற்காக ரூ. 87ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் 14. 9 கோடி விவசாய குடும்பத்தினர் பயனடைவர் என்றார்.

Tags:

Comments are closed.