சசிகலாவுக்கு சலுகைகள் கொடுத்த சிறைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராமேஸ்வரத்தில் மறைந்த குடியரசுதலைவர் அப்துல்கலாமின் நினைவு மணி மண்டபத்தைத் திறக்க பிரதமர் மோடி 27ம் தேதி தமிழகம் வருகிறார் என தெரிவித்தார்.

மேலும், கமல்மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறிய அமைச்சர் சி.வி. சண்முகம், கமல்மீது வன்முறையை செலுத்தியிருக்கிறார் என்றார். சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் கொடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில்அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்த அதிகாரிகள் சட்டத்தை மீறியுள்ளனர். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்

Leave a Reply