உலகளவில் மூன்றாவது பெரியபொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ்பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தவளர்ச்சியை அடைய இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

சிறு தொழில்துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இது தொடர் பாக கூறியதாவது; எஸ்.எம்.இ துறையின் பங்களிப்புடன், இந்திய ஜிடிபியில் உற்பத்தித்துறை யின் பங்களிப்பு 20 சதவீதமாக இருப்பதை அரசு உறுதிபடுத்தும். பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மிகச்சிறந்த உத்திகளை வழங்கும். இதன்காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5 லட்சம்கோடி டாலர் என்கிற நிலையை எட்டும். இதில் உற்பத்தி துறையிலிருந்து மட்டும் 1 லட்சம்கோடி டாலர் பங்களிப்பு இருக்கும். உற்பத்தித்துறையின் வளர்ச்சியை சாத்தியமாக்க சர்வதேச வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அடையாளம் காணும் முயற்சிகளிலும் அரசுஈடுபட்டுள்ளது.

2008-ம் ஆண்டில் சர்வதேச மந்தநிலை உருவானபோது மிகப்பெரிய வங்கிகள் அதிக நஷ்டத்தை சந்தித்ததாக சில நாடுகள் கூறின. இந்தவங்கிகளுக்கு அதிக அளவிலான தொகை மறுமூலதனம் செய்யப்பட்டது. ஆனால் சிறுதொழில் நிறுவனங்கள் சிறிய அளவிலான வெற்றிபெற்றதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. வங்கிகள் எவ்வளவு பெரியதாக இருந்ததோ அவ்வளவு பெரியதோல்வியை சந்தித்தன. சிறிய நிறுவனங்கள் தங்களுக்கேற்ற சிறியவெற்றியை சந்தித்தன. அதனால் எஸ்எம்இ துறையில் உலக நாடுகள் சிறிய அளவில் முதலீடுகளைசெய்தன. அதன் காரணமாக இப்போது சர்வதேச மந்த நிலை சீரடைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply