கடந்த இருஆண்டுகளாக மாநிலங்களவையில் சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது’, விதிகளையும், மரபுகளையும் மதிக்காமல் செயல்படுவது வேதனையளிக்கிறது. அவர்களது செயலால் அவையில் அமளி நிலவுவதோடு, மக்களின் பார்வையில் அவைமீதான மரியாதையும் சரிகிறது.  நாடாளுமன்றம் விதிகள் மற்றும் மரபுகளின்டியே இயங்குகிறது.

இந்த கூட்டத்தொடரில் சில எம்.பி.க்கள் சிலநேரங்களில் மசோதா நகல்கள் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து அவைத் தலைவர்மேஜை மீது வீசியெறிந்தனர். இது போன்ற செயல்கள் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பெருமைசேர்க்காது.

அண்மையில் அவைக்கு தற்காலிகமாகத் தலைமையேற்று நடத்திய பெண் எம்.பி.க்கு எதிராக எம்.பி. ஒருவர் தெரிவித்தகருத்து கண்டிக்கத்தக்கது.  பெண்களை அவமரியாதையாக நடத்துவதற்கு நமதுகலாசாரத்தில் இடமில்லை. இதுபோன்ற நடத்தை நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தி விடும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளின் செயல்பாடுகளை முடக்குவது என்பது  மக்களுக்கு நம்பிக்கை துரோகம்செய்வது போன்றதே .

 துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு .

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கு அம்மாநில தேர்தல்ஆணையம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் 14 பேர் இவ்விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கி பேசியது:

Comments are closed.