சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மற்றும் பந்தாரா – கோண்டியா மக்களவைதொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் பால்கர் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா – கோண்டியா தொகுதியில் தேசியவாதகாங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் பால்கர்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே காரணம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.

 

இந்நிலையில், சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், நாங்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. இன்னும் சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந்துகொண்டு வருவதாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply