சிவப்பு சுழல்விளக்கு கலாசார மனநிலையை கைவிடும்படி, பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.


நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களையும் சந்திப்பதை பிரதமர் நரேந்திரமோடி வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, உபி.,யின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்களை அவர் வியாழக்கிழமை சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து, தில்லியில் உள்ள தனது இல்லத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மோடி வெள்ளிக்கிழமை சந்தித்தார். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:


சிவப்பு சுழல்விளக்கு கலாசார மனநிலையை எம்.பி.க்கள் கைவிடவேண்டும். மக்களோடு மக்களாக இருந்து எம்.பி.க்கள் பணியாற்றவேண்டும். மத்தியில் இருக்கும் எனது அரசு மேற்கொண்டுள்ள பணிகள், ஏழைகள், கிராம மக்கள்மத்தியில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது.


நாட்டில் உள்ள 80 சதவீத கரும்புவிவசாயிகள், நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த தொகையைப் பெற்றுள்ளனர். உஜ்வலா திட்டத்தின்கீழ், மத்தியஅரசால் வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத்திட்டத்தால், ஏழைப்பெண்கள் மிகப்பெரும் பலனடைந்துள்ளனர்.


அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதுசந்தித்து, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் மோடி.

Leave a Reply